Saturday 9 March 2013

நான்கு வரி எழுதி பார்த்தேன் 
நன்றாய் இருந்தது என நினைத்து 
நண்பர்களுடன் பகிர்ந்தேன்..

யாப்பு, அசை, சீர் இல்லையாம் 
அங்காங்கே தளை தட்டுகிறதாம் 
ஒழுங்கு இல்லையாம் 
உள் கட்டமைப்பு அறவே 
சரி இல்லையாம்...

அன்பர்களே இன்னும் 
சற்றே மெனக் கெடுங்கள்...
சற்றேனும் தமிழ் 
தென்பட்டால் தகவல் 
பக்கத்தில் கொஞசம் 
பகிருங்கள்...

Thursday 26 July 2012

என்னுள்ளே என்னுள்ளே
(என்ன இருக்கு யாருக்கு தெரியும்?)
கவிதை முயற்சிக்கிலாம் என்றால்
மனசாட்சி கேள்வி கேட்கிறது...
தமிழ் மறக்காமல் இருக்க
படிக்கிறேன், படித்ததை எழுதி பார்க்கிறேன்..
படிக்கும்போது எழும் எண்ணங்களை
பகிர தமிழறிந்த உள்ளங்கள்
பக்கத்தில் இல்லையே....

Tuesday 1 May 2012

சட்டமன்றத்தில் அலைபேசியில்
படம் பார்த்தால் குற்றம்...
அலைபேசி, அண்டவலையத்தில்
படமாக வந்தாலும் குற்றம்...
மக்கள் பிரதிநிதிகள் என்னதான் செய்ய...?
நாக்கை கடித்து, கையை நீட்டி
பேச கூடாது என்று எந்த சட்டத்தில்
என்று கேட்கும் எதிர் கட்சி தலைவர்...
அவர் கட்சியின் அவை தலைவரிடம்
பாடம் படிக்காமல் மக்களே மக்களே என்று
வசனம் பேசுகிறார்...
தலைவா...நடிக்கவே ஒத்திகை பார்க்கும்
நீங்கள், இதற்கு எந்த துணிவில்
ஒத்து கொண்டீர்கள்...
உங்கள் எதிரி வெளியில் இல்லை...
உங்களில் ஒருவன், உங்கள் கட்சியில் ஒருவன்தான்
உங்களுக்கு எல்லாம் தப்பு தப்பாய்
சொல்லி தருகிறார்கள்...
ஏதோ உள்குத்து இருக்கு...
உஷார் ஆயிடு பாண்டி...

Saturday 21 January 2012

அன்னா ஹசாரே, அருந்ததி ராய், வேற யாரு பேரு சொல்லுங்க

ஊழலை அழிக்க அல்லது எதிர்க்க ஒரு கூட்டம் - 

அன்னா ஹசாரே வழியிலோ அல்லது அவரவர் வழியிலோ...
அரசுகளின் அடாவடிகளை எதிர்க்க ஒரு கூட்டம் -
ராய், மேதா பட்கர் வழி அல்லது அவரவர் வழி..
ஆனால், இவ்வளவு  தாண்டவம் ஆடிய 
தானே புயல் நிவாரணத்தை 
டாஸ்மாக் கடைகள் மூலம் பகற்கொள்ளையாக 
மக்களிடம் இருந்து திரும்ப பெற்ற 
அரசாங்கத்தை கண்டிக்க எந்த ஊடகமும் 
வாய் திறவா விந்தை
எங்கள் மண்ணில் அன்றி வேறு 
எங்கு நடக்கும்...
துக்ளக் சோ ராமசாமி இதற்கும் 
எதாவது "அர்த்த சாஸ்த்ரம் " சொல்வாரா?

ஐம்பெரும் பூதங்கள்...அடுத்து யார்?

பஞ்ச பூதங்களில் 
நீரும், காற்றும் 
தங்கள் வேகத்தை எங்களுக்கு 
உணர்த்தி விட்டன..
அடுத்து யார் வருவாரோ...
நெருப்பு மூளுமா?
நிலம் குளுங்குமா?
 வானம் மண் வாசனை பார்க்குமா?
யார் எப்படி போனால் என்ன...
ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு 
நல்லா கல்லா கட்ட எப்போதும்                                                                                                                               எங்கள் வணிக பெருமக்கள் மட்டும் தயார் நிலையில.....

Thursday 8 December 2011

அண்ணாமலைக்கு அரோஹ்கரா..அர்த்தம் கேட்டால் அரோஹகரா

வீடெங்கும் விளக்கேற்றி
வாணமும் கார்த்தியும் சுற்றிவிட்டு
பொரி உருண்டை, பாயசம் வடையுடன்
விருந்துண்டு ஓய்ந்திருக்கும் வேளையிலாவது
யாரேனும் கார்த்திகை தீப ஜோதிதரிசன
தத்துவத்தை சிந்திப்பார்களா?
என யோசைனையில் நான்...

Sunday 16 October 2011

PAST-PRESENT-FUTURE...

இரவு பணியில் கண்கள் சொக்கி 
ஆள் யார் வருவார் என வாசல் பார்த்திருந்தேன்.
வந்தவர் அகவை எழுபதை தொட்டவர்
காலை காய்கறி வாங்கவந்தவர் வசம் நான்...
அவரின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தோழர்களை பற்றி
என்னிடம் (!) அளவளாவி பண்ருட்டி ரமணி என்கிற
வெங்கடரமணி (அவர் பேசியதில் எனக்கு பரிச்சியமான
பெயர் ) நடராஜ லஞ்ச் ஹோம் என பல பல பேசிக்கொண்டு ...
நம்புங்கள்...என் மனதில் பிளாஷ்பாக் எதுவும் ஓடவில்லை.
இவர் வயதில் நான் எதை பற்றி பேச போகிறேன் என்று
நினைத்தேன்.. ஒன்றும் புரியவில்லை ..
அது சரி..நிகழ்காலமே ஜிந்தாக்கு ஜிந்தக ஜிந்த ஜிந்தாகு...
எதிர் காலம் என்ன வைத்திருக்கிறது மூடிய கைகளில்?