Thursday 8 December 2011

அண்ணாமலைக்கு அரோஹ்கரா..அர்த்தம் கேட்டால் அரோஹகரா

வீடெங்கும் விளக்கேற்றி
வாணமும் கார்த்தியும் சுற்றிவிட்டு
பொரி உருண்டை, பாயசம் வடையுடன்
விருந்துண்டு ஓய்ந்திருக்கும் வேளையிலாவது
யாரேனும் கார்த்திகை தீப ஜோதிதரிசன
தத்துவத்தை சிந்திப்பார்களா?
என யோசைனையில் நான்...

Sunday 16 October 2011

PAST-PRESENT-FUTURE...

இரவு பணியில் கண்கள் சொக்கி 
ஆள் யார் வருவார் என வாசல் பார்த்திருந்தேன்.
வந்தவர் அகவை எழுபதை தொட்டவர்
காலை காய்கறி வாங்கவந்தவர் வசம் நான்...
அவரின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தோழர்களை பற்றி
என்னிடம் (!) அளவளாவி பண்ருட்டி ரமணி என்கிற
வெங்கடரமணி (அவர் பேசியதில் எனக்கு பரிச்சியமான
பெயர் ) நடராஜ லஞ்ச் ஹோம் என பல பல பேசிக்கொண்டு ...
நம்புங்கள்...என் மனதில் பிளாஷ்பாக் எதுவும் ஓடவில்லை.
இவர் வயதில் நான் எதை பற்றி பேச போகிறேன் என்று
நினைத்தேன்.. ஒன்றும் புரியவில்லை ..
அது சரி..நிகழ்காலமே ஜிந்தாக்கு ஜிந்தக ஜிந்த ஜிந்தாகு...
எதிர் காலம் என்ன வைத்திருக்கிறது மூடிய கைகளில்?

Sunday 11 September 2011

அமெரிக்கர்களுக்கு இரெட்டை கோபுர தகர்ப்பு
நினைவு நாள்....
எங்களுக்கு மகாகவி பாரதியின் [சுப்புணி ]
நினைவு நாள்...
இன்று இருந்தால் எந்த தமிழில் பாடுவாய் பாரதி?
செந்தமிழ்? செம்மொழி? சென்னை தமிழ்?
திரை தமிழ்? சின்ன திரை  தமிழ்?
நீ மகாபுண்ணியவான் பாரதி,
இதை எல்லாம் கேட்காமல் போனாய்!
உன் நினைவோடு கொஞ்சம் தமிழையும்
சுவாசித்து கொள்கிறேன்.

Monday 25 July 2011

சமச்சீர் கல்வி தந்த முதியோர் கல்வி

புத்தகம் கொடுக்காமல் இரண்டு மாதமாய்
படுத்தி எடுக்கிற மகனின்  மூலமாக
நான் கற்று (?)கொண்ட சில தகவல்கள்....

Almond என்றால் வாதுமை அல்லது வாதங்க்கொட்டை..
அரசமரத்துக்கு ஆங்கிலத்தில் pipal or peepal tree..
wallnut என்றால் walnut or wallnut..எது சரி?...

எங்கள் ஊரில் 4 பெரிய புத்தக கடைகள்,
15க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்...
தூசி படிந்து மூலையில் கிடந்த விலங்குகள்,
தாவரங்கள், தலைவர்கள், இன்னபிற
chart பேப்பர் மூன்று ருபாய்...

வள்ளுவர் படத்தின் மீது பேப்பர் ஒட்டும் கொடுமை..
அவர் என்ன தி.மு .க.வின் கொ.ப.செ.வா?

தனக்கு ஒரு பிள்ளை இருந்தால் வீணான
நாட்களும் விரயமான பணமும்
மனதை வலிக்க செய்து இருக்கும்...
வீம்பிற்கும் வெட்டு கௌரவத்திற்கும்
முதல் பலி கல்வி
அடுத்து பெற்றோரின் சம்பாத்தியம்...

திருந்தவே மாட்டார்களா?
துக்ளக் சோதான் சான்று தரவேண்டும்.



Sunday 10 July 2011

முதல்ல இல்ல ஆனா இப்ப நாங்கதான்

முதலில் இந்திய அமைதி படை
வடக்கில் சல்வா ஜுடும் (ஆனா சரியாய் சுடும்)
அடுத்து தில்ஷன் என்கிற சென்னை சிறுவன் பின்மண்டையில்
துப்பாக்கி சுடும் பயிற்சி!
ஆனாலும் கட்டுப்பாட்டுக்கும் கடமைக்கும்
பேர் "போனது" இந்திய ராணுவம்!
.
.
.
ஒவ்வொரு தோட்டாவும் கணக்குல வரணுமே...
ராணுவத்துல யாரும் "டாலி" படிக்கலையோ?
விவேக் காமெடில வரமாதிரி என்னைய புடிச்சி
கேட்க போறாங்கோ "நீ ரொம்ப பேசற,
தீவிரவாதியான்னு செக் பண்ணுங்கப்பா "

தாய் மண்ணே வணக்கம்.
சுஜாதாவின் "அவர்கள் வருகிறார்கள்" கதையில்
ஒரு வரி: நமது மண்ணில் நமது மக்களையே ராணுவம்
வேட்டையாடும் விபரீதம் என்று தோன்றியது?


யோசித்தால் ரொம்ப கோபம் வருகிறது.
என்ன செய்யலாம்?
யோசிப்போம் அடுத்த தோட்டா பாயும்வரை....

Saturday 9 July 2011

இரவின் நிஜங்கள்

இரவு நேர பணியாளர்களுக்கு மட்டுமே
கிடைக்கும் இரவின் முரண்கள்...
தட தட என கடந்து செல்லும்
புகை(?)வண்டியில் வினோத காட்சிகள்...
இயக்கமே இல்லாத உறங்கும் மனித உயிர்கள்
நூறு சதம் இயக்கத்தில் தடதடக்கும்
எந்திரங்கள்...
புன்னகை விளக்குடன் நான்.

Friday 24 June 2011

முதல் கவிதை

விரல்கள் விசைபலகையோடு 
விழிகள் கணினி திரையோடு 
மனம் மண்ணின் நினைவோடு 
தினம் கவிதை மழையோடு ....


வருவேன் மீண்டும் எந்தமிழோடு!